அமெரிக்க மற்றும் பிரேசில் அரசுத் தலைவர்கள் சந்திப்பு
2023-02-12 18:42:11

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் 10ஆம் நாள் வெள்ளிகிழமை வெள்ளை மாளிகையில் பிரேசில் அரசுத் தலைவர் லூலாவைச் சந்தித்துரையாடினார். அப்போது இருநாட்டுத் தலைவர்களும் காலநிலை மாற்றம், தொடரவல்ல வளர்ச்சி உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர். அதன்பின், அமேசான் மழைக் காட்டைப் பாதுகாப்பதில் அமெரிக்கா பிரேசிலுக்கு நிதியுதவி அளிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்தது.

தவிர, உக்ரைன் மோதல், ஐ.நா.பாதுகாப்பவை சீர்திருத்தம் முதலியவை பற்றியும் அவர்கள் கலந்துரையாடினர்.