சின்ஜியாங்கின் கிராமப்புறங்களில் 58ஆயிரம் கிலோமீட்டர் நெடுஞ்சாலைக் கட்டுமானம்
2023-02-12 18:50:05

2018ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை, சீனாவின் சின்ஜியாங்கின் கிராமப்புறப் பகுதியில், 4160கோடி யுவான் நிதி ஒதுக்கீட்டில், 58ஆயிரம் கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலை புதிதாக கட்டியமைக்கப்பட்டு அல்லது மறுசீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம், உள்ளூர் மக்களின் பயணம் மேலும் வசதியாகியுள்ளதாக  சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் போக்குவரத்து பணியகத்திலிருந்து கிடைத்த தகவலில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும், 2023ஆம் ஆண்டில், கிராமப்புற நெடுஞ்சாலைக் கட்டுமானத்துக்கு கூடுதலாக 800கோடி யுவான் ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.