துருக்கி மற்றும் சிரியாவுக்கு சீனாவின் தானிய உதவி
2023-02-13 19:53:10

துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட பின், சீனா மீட்புதவிப் பணிக்கு ஆக்கப்பூர்வமாக ஆதரவையும் உதவியையும் வழங்கி வருகின்றது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென் பின் 13ஆம் நாள் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தொடங்கியுள்ள தானிய உதவித் திட்டப்பணியின் செயல்பாட்டை சீனா விரைவுப்படுத்தி வருகிறது. 220டன் கோதுமைகள் சிரியாவுக்கு அனுப்பப்படும் வழியில் இருக்கின்றன. மற்ற 3000 டனுக்கு மேற்பட்ட அரிசிகளும் கோதுமைகளும் நடப்பு மாதத்தில் கட்டங்களாக அனுப்பப்படவுள்ளன என்று தெரிவித்தார்.