ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் மீது ஈராக் தாக்குதல்
2023-02-13 09:49:31

ஈராக்கின் விமானப் படை பிப்ரவரி 12ஆம் நாள் அந்நாட்டின் தியாலா மாநிலத்தில் வான் தாக்குதல் தொடுத்தது. இதில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 7 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர் என்று ஈராக் இராணுவம் தெரிவித்தது.  

முன்னதாக, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் மீதான தாக்குதலில் வெற்றி பெற்றதாக ஈராக் 2017ஆம் ஆண்டு டிசம்பர் அறிவித்தது. அதன் பிறகு, இவ்வமைப்பின் எஞ்சிய சக்திகள் ஈராக்கின் தொலைவிலுள்ள கிராமப்புறத்திலும், ஈராக்-சிரியா இடையிலான எல்லைப் பகுதியிலும் பதுங்கினர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, இவ்வமைப்பின் மீதான தாக்குதலை ஈராகின் இராணுவம் வலுப்படுத்தியுள்ளது.