வசந்த காலத்தின் முதல் மாதத்துக்குள் லா நினா நிகழ்வு முடிவு
2023-02-13 18:46:19

தற்போது நீடித்து கொண்டிருக்கும் லா நினா நிகழ்வு 2023ஆம் ஆண்டில் வசந்த காலத்தின் முதலாவது மாதத்துக்குள் முடிவுக்கு வரவுள்ளதாகச் சீனத் தேசிய காலநிலை மையத்திலிருந்து தகவல் தெரிய வந்துள்ளது.

பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள மத்திய மற்றும் கிழக்குப் பசிபிக் கடற்பரப்பில் இயல்பை மீறி பரந்தளவில் வெப்பநிலை குறைந்து 5 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருவதால், லா நினா என்ற வானிலை நிகழ்வு தோன்றும்.