நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடங்களின் தரத்தின் மீது துருக்கியின் புலனாய்வு
2023-02-13 16:15:07

துருக்கியின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் பெகிர் போஸ்டாக் பிப்ரவரி 12ஆம் நாள் கூறுகையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள தரமற்ற கட்டிடங்களுக்குப் பொறுப்பான ஒப்பந்த முறை வணிக நிறுவனங்கள் மற்றும் பொறியியலாளர்களைக் கைது செய்ய, துருக்கியின் வழக்கறிஞர் மன்றம் அன்று 134 கைது உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், நிலநடுக்கத்தில் இழந்து விழுந்த அதிகமான கட்டிடங்கள் பற்றி புலனாய்வு செய்யும் விதம், அந்நாட்டின் 10 மாநிலங்களில் நிலநடுக்கத்துடன் தொடர்புடைய குற்றப் புலனாய்வுப் பணியகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

துருக்கியின் தென் பகுதியில் 6ஆம் நாள் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 20 ஆயிரத்துக்கும் மேலான கட்டிடங்கள் இழந்து விழுந்தன. இந்நிலையில், பல்வேறு துறையினர்களும் இடிந்து விழுந்த கட்டிங்களின் மீது சந்தேகம் எழுப்பியிருந்தனர் குறிப்பிடத்தக்கது.