சீனா-மாலத்தீவு கண் மைய உதவி மற்றும் ஒத்துழைப்பு திட்டம்
2023-02-13 11:04:15

சீனா-மாலத்தீவு கண் மைய உதவி மற்றும் ஒத்துழைப்பு திட்டத்துக்கான துவக்க விழா 11ஆம் நாளிரவு நடைபெற்றது. இதில், மாலத்தீவின் துணைத் அரசுத் தலைவர் பைசல் நசீம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் உரையாற்றிய நசீம், மாலத்தீவில் கண் மையத்தை உருவாக்கும் பொருட்டு மருத்துவ நிபுணர் குழுவை அனுப்பிய சீனாவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், சீனாவுடன் இணைந்து பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாகவும் அவர் எதிர்பார்ப்பு தெரிவித்தார்.

மாலத்தீவு சென்றுள்ள சீன மருத்துவக் குழுவினர் அன்றாட மருத்துவப் பணிகளைத் தவிர, மருத்துவமனை மென்பொருள் கட்டுமானத்தையும் திட்டமிட்ட முறையில் உருவாக்குவார்கள். அதோடு, உள்ளூர் மருத்துவப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலும் கவனம் செலுத்துவார்கள் என்று இக்கண் மையத்தின் பொறுப்பாளர் சென் வீரோங் கூறினார்.