துருக்கி நிலநடுக்கத்துக்கான சீனாவின் உதவி
2023-02-13 10:00:35

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்குச் சீனா நன்கொடையாக வழங்கிய முதல் தொகுதி உதவிப் பொருட்களான போர்வைகள் மற்றும் கூடாரங்களை ஏற்றிக்கொண்டு, சீனாவிலிருந்து புறப்பட்ட இரு விமானங்கள் பிப்ரவரி 12 ஆம் நாள் இஸ்தான்புல் நகரைச் சென்றடைந்தன.

இதனிடையில், நிலநடுக்கம் நிகழ்ந்த 150 மணி நேரத்திற்குப் பிறகு, துருக்கி ஹதாய் மாநிலத்தின் அன்தாகியா நகரில் மீட்புப் பணி மேற்கொண்ட சீன உதவி அணியால், இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவர் 12ஆம் நாள் பிற்பகல் உயிரோடு காப்பாற்றப்பட்டுள்ளார்.