உலக டிஜிட்டல் கல்வி மாநாடு
2023-02-13 11:16:09

உலக டிஜிட்டல் கல்வி மாநாடு பிப்ரவரி 13ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கவுள்ளது. 2 நாட்கள் நீடிக்கும் இம்மாநாடு நேரடியாகவும் இணையவழியிலும் நடத்தப்படுகின்றது. 130க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் டிஜிட்டல் மாற்றம், டிஜிட்டல் கற்றல் வள மேம்பாடு மற்றும் பயன்பாடு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வி உயர்வு, கல்வியின் டிஜிட்டல் முறை மேலாண்மை முதலிய தலைப்புகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.

சீனாவில் உலகின் மிக பெரிய கல்வி மூலவள மையம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பயனாளர் பரவல் செய்யப்பட்டுள்ளனர். 2023ஆம் ஆண்டின் பிப்ரவரி 10ஆம் நாள் வரை, இது தொடர்பான இணைப் பக்கங்களைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 670 கோடியைத் தாண்டியது என்று சீனக் கல்வி அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.