சீனாவின் காற்றாலை மற்றும் ஒளிவோல்ட்டா மின்னாற்றல் உற்பத்தி வளர்ச்சி
2023-02-14 16:15:03

சீன தேசிய எரியாற்றல் நிர்வாகம் 13ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின் படி, வேகமான வளர்ச்சி, தரமான இயக்கம், உயர் நிலை பயன்பாடு, வலிமைமிக்க போட்டியாற்றல் ஆகிய தனிச்சிறப்புகளை 2022ஆம் ஆண்டில் சீன புதுப்பிக்கவல்ல எரியாற்றல் துறை கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.

இந்நிர்வாகத்தின் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி பிரிவின் துணைத் தலைவர் வாங் தாபெங் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

கடந்த ஆண்டில், காற்றாலை மற்றும் ஒளிவோல்ட்டா மின்னாற்றல் உற்பத்தியளவு, ஒரு இலட்சம் கோடி கிலோவாட்டைத் தாண்டியது. நாடளவில் நகர மற்றும் கிராமவாசிகளின் வாழ்க்கைக்கான மின்சார நுகர்வு அளவை இது நெருங்கியது. சீனா உற்பத்தி செய்த ஒளிவோல்ட்டா மற்றும் காற்றாற்றல் மின்னாக்கி உள்ளிட்ட முக்கிய உபகரணஹ்கள், உலக சந்தையில் 70 விழுக்காடு வகிப்பது குறிப்பிடத்தக்கது என்றார்.