ஒருசார்பு தடையை நீக்கி குழந்தைகளுக்கு வாழும் வாய்ப்பை வழங்க வேண்டும்:சீனா
2023-02-14 10:21:28

தொடர்புடைய நாடுகள் நிபந்தனையின்றி ஒருசார்பு தடை நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நீக்கி, குழந்தைகளுக்கு வாழும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சாங்சூன் 13ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார். ஐ.நா பாதுகாப்பவையில் குழந்தைகள் மற்றும் ராணுவ மோதல்கள் பற்றி நடைபெற்ற கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிரியாவில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த பிறகு, சட்டப்பூர்வமற்ற ஒருசார்பு தடை நடவடிக்கையால் கனரக சாதனங்கள் மற்றும் மீட்பு வசதிகள் துறையில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியுள்ள பல குழந்தைகள் இதனால் இன்னுயிர் இழக்கக் கூடும் என்று அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறுகையில், குழந்தையின் உரிமைகள் பற்றிய ஒப்பந்தத்தை  இன்னும் அங்கீகரிக்காத கடைசி நாடு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, இவ்வொப்பந்தம் முழுமையாகச் செயல்படுவதில் பங்கெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.