சிரியாவுக்கான 2ஆவது தொகுதி சீன உதவி பொருட்கள்
2023-02-14 11:07:20

சீன செஞ்சிலுவை சங்கம் சிரியாவுக்கு நன்கொடையாக கொடுத்த 2ஆது தொகுதி மனித நேய உதவி பொருட்கள் பிப்ரவரி 13ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் தமாஸ்காஸைச் சென்றடைந்தன. சிரியாவுக்கான சீன செஞ்சிலுவை சங்கத்தின் மீட்பு அணியின் தலைவர் கோ யாங் தமாஸ்காஸ் சர்வதேச விமான நிலையத்தில் கூறுகையில்,

2ஆவது தொகுதி உதவி பொருட்களில் பருத்தி கூடாரங்கள், குளிர்கால ஆடைகள், அத்தியாவசிய பொருள் பெட்டிகள், அவசர மருந்துகள் ஆகியவை அடக்கம். இரு நாட்களில் இந்த பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு 10 ஆயிரத்துக்கும் மேலான மக்களுக்கு அளிக்கப்படும் என்றார்.