வங்கதேசத்தின் அரசுத் தலைவராக ஷகாபுதீன் ஷுப்பு பதவியேற்பு
2023-02-14 10:08:59

வங்காளதேசத்தின் 22ஆவது அரசுத் தலைவராக முகமது ஷகாபுதீன் ஷுப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஹபிபுல் அவால் திங்கள்கிழமை தெரிவித்தார். ஆளும் வங்கதேச அவாமி லீக் கட்சியின் வேட்பாளரான இவர்,போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ஷகாபுதீன் ஷுப்பு, ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணையத்தின் முன்னால் ஆணையர் ஆவார்.

வங்கதேச அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு நபர் இரண்டு முறை மட்டுமே அரசுத் தலைவர் பதவி வகிக்க முடியும். எனவே, தற்போதைய அரசுத் தலைவர் அப்துல் ஹமிது, வேட்பாளராகக் களமிறக்கப்படவில்லை. இரண்டாவது முறையாக அரசுத் தலைவர் பதவி வகிக்கும் ஹமீதின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.