சீனாவுடன் அமெரிக்காவின் சரக்கு வர்த்தகத் தொகை புதிய உச்சம்
2023-02-14 19:44:38

2022ஆம் ஆண்டு, சீனாவுடன் அமெரிக்காவின் சரக்கு வர்த்தக தொகையானது, 2018ஆம் ஆண்டில் இருந்த 66150கோடி அமெரிக்க டாலரைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டியது என்று அமெரிக்க வணிக அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என். தனது இணையதளத்தில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், தொடர்பை துண்டிப்பது அல்லது பல்வேறு துறைகளில் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது போன்ற கூற்றுகள், கொள்கைகள் பற்றிய விவாதத்தில் கேட்கப்பட்டுள்ளன. ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை. பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் தொடர்ந்து சீனப் பொருட்களின் மீது மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.