சூறாவாளியால் அவசர நிலையில் உள்ளது: நியூசிலாந்து அறிவிப்பு
2023-02-14 17:02:31

கேப்ரியல் எனும் சூறாவளியின் பாதிப்பைச் சமாளிக்கும் விதம், தேசிய அவசர நிலையை நியூசிலாந்து அரசு 14ஆம் நாள் செவ்வாய்கிழமை அறிவித்தது.

முன்பு காணாத இடர்பாடு கொண்டு வரக் கூடும் இயற்கை சீற்றமாக இது இருக்கும் என்று நியூசிலாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

அன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அந்நாட்டு தலைமையமைச்சர் ஹிப்கின்ஸ், நாட்டில் உள்ள அடிப்படை வசதிகளை இச்சூறாவளி சீர்குலைத்துள்ளதோடு, நாட்டின் பொருளாதாரத்துக்கு கடும் பாதிப்பு கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்தார்.