அறிவிக்கப்பட்ட 2023 மத்திய ஆவண எண் 1
2023-02-14 10:00:45

2023ஆம் ஆண்டு சீனாவின் மத்திய ஆவண எண் 1, 13ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டில்  கிராமப்புறங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் திட்டத்தைப் பன்முகங்களிலும் முன்னேற்றும் முக்கியப் பணிகள் குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி மற்றும் சீன அரசவையின் கருத்துக்கள் என்பது இந்த ஆவணத்தின் தலைப்பாகும்.

சோஷலிச நவீனமயமாக்க நாட்டைப் பன்முகங்களிலும், கட்டியமைப்பதற்கான மிகவும் கடினமான பணி இன்னும் கிராமப்புறங்களில் நடைபெற்று வருவதாக இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை, கிராமப்புறங்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளை விடாமுயற்சியுடன் தீர்ப்பதை, கட்சி பணியின் முதன்மைப் பணியாக மேற்கொள்ள வேண்டும். முழு கட்சி மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் சக்தியை அணிதிரண்டு, கிராமப்புறங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் திட்டத்தைப் பன்முகங்களிலும் முன்னேற்ற வேண்டும். வேளாண்மை மற்றும் கிராமப்புறங்களின் நவீனமயமாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி கருத்து தெரிவித்துள்ளது.