2023 பட்டுப்பாதை ஊடக மன்றக் கூட்டம்
2023-02-14 20:50:13

2023ஆம் ஆண்டு பட்டுப்பாதை ஊடக மன்றக் கூட்டம் பிப்ரவரி 14ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரைத் துறை அமைச்சர் லீ ஷூலெய் அதில் காணொளி வழியாக உரைநிகழ்த்தினார்.

அவர் குறிப்பிடுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பை முன்வைத்த 10ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு ஆகும். கடந்த 10ஆண்டுகளில், சர்வதேச சமூகத்தில் பரந்த அளவில் வரவேற்கப்பட்ட பொது பொருளாக அது மாறியுள்ளது. சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பின் புதிய உச்சத்தை இது வெளிக்காட்டியுள்ளது. அமைதியான வளர்ச்சிப் பாதையில் சீனா உறுதியாக ஊன்றி நிற்கும். பரஸ்பர நலன் மற்றும் கூட்டு வெற்றி தரும் திறப்பு நெடுநோக்கைச் செயல்படுத்துவதில் ஊன்றி நிற்கும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தையும் மனிதகுலத்திற்குப் பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட சமூகத்தின் உருவாக்கத்தையும் சீனா முன்னெடுக்கும் என்று லீ ஷூலெய் தெரிவித்தார்.

2023 பட்டுப்பாதை ஊடக மன்றக் கூட்டம் சீன ஊடகக் குழுமத்தால் நடத்தப்பட்டது. கைகோர்த்து கொண்டு வளர்ச்சி அடைந்து, பரஸ்பர நலன் மற்றும் கூட்டு வெற்றி தரும் ஒத்துழைப்பு என்பது அதன் தலைப்பாகும். 33நாடுகள் மற்றும் பிரதேசங்களை சேர்ந்த 54 செய்தி ஊடகங்களின் 120க்கும் அதிகமான விருந்தினர்கள் நேரடியாகவும் இணைய வழியாகவும் இம்மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.