உலகின் மிகப் பெரிய கண்காணிப்பு நாடு அமெரிக்கா தான்: சீனா
2023-02-14 19:00:26

அமெரிக்காவின் வானில் அடையாளம் தெரியாத பலூன் நேட்டோ நாடுகள் மீது சீனாவும் ரஷியாவும் கண்காணிப்பு செயல்களை அதிகரிக்கும் அறிகுறியாகும் என்று நேட்டோ பொது செயலாளர் 13ஆம் நாள் கூறினார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வேன்பின் 14ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் பதிலளிக்கையில், சீனாவின் சிவில் பயன்பாட்டிற்கான ஆளில்லா வான்கப்பல் அமெரிக்க வான் எல்லைக்குள் வழிதவறிச் சென்ற எதிர்பாராத சம்பவம் குறித்து சீனா பன்முறை நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.  நேட்டோ தரப்பின் இந்த கூற்று முற்றிலும் அவதூறு பரப்புவதாக உள்ளது என்றார்.

பிற நாடுகளின் மீதான கண்காணிப்பு செயலைக் குறிப்பிடும் போது, அமெரிக்கா தான் உலகளவில் மிகப் பெரிய கண்காணிப்பு நாடாகும். அமெரிக்காவின் கண்காணிப்புச் செயல் பற்றி ஐரோப்பா உள்ளிட்ட சர்வதேச சமூகம் நன்கு அறிந்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு டென்மார்க் உளவு நிறுவனத்துடனான ஒத்துழைப்பைப் பயன்படுத்தி, ஜெர்மனி, ஸ்வீடன், நார்வே, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை ஒட்டுக்கேட்டது. அப்போதைய ஜெர்மனி தலைமை அமைச்சர் மெர்க்கல் கூட அமெரிக்காவால் ஒட்டுக்கேட்கப்பட்டார் என்று டென்மார்க் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டது.