வெளிநாட்டுப் பயணத்தின் மீட்சியுடன் சீனா மற்றும் பன்னாடுகளிடையே பரிமாற்றம் மேலும் ஆழமாகும்:சீனா
2023-02-15 18:34:21

முதலாவது சீனச் சுற்றுலா குழுவின் வருகையுடன், மேலதிக சீனப் பயணிகளின் வருகையை ஈர்க்க, சுற்றுலா பயணியர் வசதிகளை மேம்படுத்தி வருவதாக பன்னாபடுகள் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டுப் பயணம் மீட்சி பெறுவதுடன், சீனா மற்றும் உலக நாடுகளிடையில் பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட துறைகளின் பரிமாற்றம் மேலும் ஆழமாக மாறும். உலகப் பொருளாதாரத்தின் மீட்சிக்கும் மேலதிக நம்பிக்கை மற்றும் உந்து ஆற்றலைக் கொண்டு வருமென சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வேன்பின் 15ஆம் நாள் தெரிவித்தார்.

சீனப் பயணிகளின் வெளிநாட்டுப் பயணம் பன்னாட்டுச் சுற்றுலா துறையின் மீட்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய உயிராற்றல் கொண்டு வருவதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் அவர் கூறினார்.