காலநிலை மற்றம் விவகாரம் பற்றிய சீனப் பிரதிநிதியின் வேண்டுகோள்
2023-02-15 10:44:10

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு கடல் மட்ட உயர்வின் தாக்கங்கள் குறித்து, ஐ.நா பாதுகாப்பு அவை பிப்ரவரி 14ஆம் நாள் வெளிப்படை விவாதம் ஒன்றை நடத்தியது. காலநிலை வெப்பமாகும் வேகத்தை குறைத்து, கடல் மட்டம் உயர்வேகத்தில் உயர்வதைக் கட்டுப்படுத்த, சர்வதேசச் சமூகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ட்சாங் ஜுன் இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் கூறுகையில், சிறிய தீவு வளரும் நாடுகள் காலநிலையால் எளிதாகப் பாதிக்கப்படும். வளரும் நாடுகளுக்கு காலநிலை மாற்றத்துக்கான நிதியுதவியை வழங்கும் பொறுப்பு வளர்ந்த நாடுகளுக்கு உண்டு. ஆண்டுதோறும் வளரும் நாடுகளுக்கு 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதியுதவியை வழங்குவது என வளர்ந்த நாடுகள் 2009ஆம் ஆண்டு வாக்குறுதி அளித்தன. ஆனால் இதுவரை அந்நாடுகள் வாக்குறுதியை உண்மையாக நிறைவேற்றவில்லை என்றார்.