அமெரிக்காவின் தடை நடவடிக்கைக்குப் பதிலடி நடவடிக்கை:சீனா
2023-02-15 19:04:48

சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைச் சீர்குலைப்பதுடன் தொடர்புடைய அமெரிக்க நிறுவனங்கள் மீது சீனா சட்டப்படி பதிலடி நடவடிக்கை அளிக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் 15ஆம் நாள் தெரிவித்துள்ளது. சீனாவின் சிவில் பயன்பாட்டிற்கான வான்கப்பல் ஒன்று வழி தவறி அமெரிக்கா சென்று விட்டது. இது, முற்றிலும் தடுக்கப்பட முடியாத காரணியால் ஏற்பட்ட ஓர் எதிர்பாராத நிகழ்வு ஆகும். இவ்விவகாரம் குறித்து சீனா பலமுறை அமெரிக்காவிடம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், அமெரிக்கா இயல்பை மீறி செயல்பட்டு, நிலைமையைத் தீவிரமாக்குவதில் ஈடுபட்டுள்ளது. அதை சாக்குப்போக்காகப் பயன்படுத்தி, சீன நிறுவனங்கள் மீது தடை விதிப்பதாக அறிவித்தது. அதை உறுதியாக எதிர்க்கும் அதே சமயத்தில்,  சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைச் சீர்குலைப்பது தொடர்பான அமெரிக்க நிறுவனங்கள் மீது பதிலடி நடவடிக்கைகளை சீனா சட்டப்படி மேற்கொள்ளும் என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். கடந்த மே திங்கள் முதல், அமெரிக்கா தனது உள்நாட்டில் பல பலூன்களை விடுவித்துக்  கொண்டு, உலகளவில் பறந்து சென்றன. சீனாவின் அங்கீகாரம் இல்லாமல், 10க்கும் மேலான முறையாக சீனாவின் வான் எல்லையில் நுழைந்து, சின்ஜியாங் மற்றும் திபெத் உள்ளிட்ட பகுதிகளின் மேல் பறந்து வந்தன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.