சிரியாவுக்கு 40 கோடி டாலர் உதவி வழங்க ஐ.நா வேண்டுகோள்
2023-02-15 16:02:46

சிரியா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மனித நேய உதவிக்காக, சர்வதேச சமூகம் 39.7 கோடி அமெரிக்க டாலர் நன்கொடை செய்ய வேண்டுமென ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரேஸ் 14ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் கூறுகையில், ஐ.நா இயன்றளவில் உதவியளித்துள்ள போதிலும், அதிக மனித நேய உதவிகளை நிறைவு செய்ய இயலவில்லை. மேலும், உதவிப் பொருட்கள் சிரியாவுக்கு நுழைதல், நிதி திரட்டல், நிவாரணப் பொருட்களின் விநியோகம் முதலியவற்றுக்குத் தடை விதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.