அதிகமான விமானங்களை வாங்கும் ஏர்இந்தியா
2023-02-15 10:22:26

இந்தியாவின் தனியார் விமான நிறுவனமான ஏர் இந்தியா, விரைவில் புதிதாக ஏர்பஸ் நிறுவனத்தின் 250 விமானங்களை வாங்க உள்ளது. இவற்றில் அகலமான மற்றும் நீளமான ஏ350 ரக விமானங்கள் 40-ம், குறுகிய-உடல் கொண்ட விமானங்கள் 210-ம் அடக்கம்.

ஏர்பஸ் நிறுவனத்துடான 470 விமானங்களுக்கு ஏர் இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த விமானங்கள் வாங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனைத் தவிரவும், ஏர்இந்தியா நிறுவனம் தனது சந்தையை விரிவுபடுத்தும் நோக்கில் 290 போயிங் ஜெட் விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் உறுதியாகும் பட்சத்தில், தெற்காசியாவில் அதிக போயிங் விமானங்களுக்கான முன்பதிவாகவும் நிறுவனத்தின் வரலாற்றில் மைல்கல் முக்கியத்துவமாகவும் இது இருக்கும் என்றும் போயிங் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியாவின் விரிவான உருமாற்றம் மற்றும் வளர்ச்சி வியூகத்துக்கு நவீன போயிங் ஜெட்கள் முக்கியமாக உள்ளன என்று ஏர் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி கேம்பல் வில்சன் தெரிவித்தார்.