ரயில் தடம் புரண்ட சம்பவத்தில் மனித உரிமை உண்டா?
2023-02-15 11:01:27

அமெரிக்க ஒஹாயோ மாநிலத்தின் கிழக்கு பாலஸ்தீன நகரில் பிப்ரவரி 3ம் நாள் ஒரு தொடர் வண்டியின் 50 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின.அவற்றில் வேதியியல் நச்சு பொருட்கள் ஏற்றிச்செல்லப்பட்டன. பெட்டிகளிலுள்ள விஷவாயுவை கட்டுப்பாட்டுடன் வெளியேற்ற உள்ளூர் அவசர வாரியம் முடிவெடுத்தது. 3 நாட்களுக்குப் பிறகு ஊருக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்ட குடிமக்களுக்குக் குறிப்பட்ட அளவில் நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

ஆனால், தற்போது வரை தொடர்புடைய வாரியங்கள், நச்சு பொருட்களின் விரிவான வெளியேற்ற அளவை, வெளியிடாதது மட்டுமல்ல, அந்நாட்டு ஊடகங்களும், இச்சம்பவம் குறித்து சிறப்பு அக்கறை காட்டவில்லை. இது பற்றி நேரலை வழங்கிய ஒரு செய்தியாளர், காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார். உயிர் ஆரோக்கியம், வாழ்க்கை சூழல் பாதுகாப்பு ஆகிய அச்சுறுத்தலை எதிர்கொண்ட நிலையில், அமெரிக்க குடிமக்களுக்குத் தகவல் அறியும் உரிமை இல்லாதது ஏன்?

இச்சம்பவத்துடன் சம்பந்தமான என் எஸ் சி தொழில் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளில் மிக அதிகளவில் இலாபம் ஈட்டும் விதம் செயல்பட்டு வந்ததுடன், ஈ சி பி என்ற நிறுத்தும் முறையை தொடர் வண்டியில் பொருத்தவும் மறுத்து வந்தது. பிரிட்டனின் தி கார்டியேன் செய்தித்தாள் இது பற்றி குறிப்பிடுகையில், அமெரிக்க ரயில் துறை, நீண்டகாலமாக இலாபத்தை பாதுகாப்புக்கு மேல் வைத்து வருகிறது. கண்காணிப்பின் பற்றாக்குறை, இச்சம்பவத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது என்று தெரிவித்தது.

இந்த அபாயமான சூழல் காரணமாக, சில அமெரிக்க குடிமக்கள், வெளியூறுக்குக் குடிபெயர வேண்டியிருக்கிறது. சாதாரண அமெரிக்கர்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கிய நலன்களை யார் பாதுகாப்பர் என்ற கேள்விக்குப் பதில் அளிக்காமல், மனித உரிமையை எப்போது பேசி வரும் அமெரிக்க அரசியல்வாதிகள் காது கேட்காதவர் போல் நடிக்கக் கூடாது.