சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி பயணத் திட்டம்
2023-02-15 16:14:32

சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பணியகம் வெளியிட்ட தகவலின்படி, 2023ஆம் ஆண்டு மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணத்துக்கான லட்சினை தேர்வுப் பணி புதன்கிழமை துவங்கியது.

2022ஆம் ஆண்டு சீன விண்வெளி நிலையம் முழுமையாக கட்டியமைக்கப்பட்ட பிறகு, சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி நிலையத் திட்டப்பணியானது பயன்பாட்டு மற்றும் வளர்ச்சிக் கட்டத்தை எட்டியது. ஆண்டுதோறும் 2 மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலங்களும், 1 முதல் 2 சரக்கு விண்கலங்களும் விண்ணில் ஏவப்பட திட்டமிட்டப்பட்டுள்ளது.