மார்ச் மாதத்துக்குள் ஐஎம்எஃப்பின் நிதியுதவி கிடைக்கக்கூடும் - இலங்கை எதிர்பார்ப்பு
2023-02-16 10:17:18

290 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவித் திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் குழு மார்ச் மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்கும் எனத் தான் நம்புவதாக இலங்கை அரசுத் தலைவர் ரணில் விக்ராமசிங்கே பிப்ரவரி 15ஆம் நாள் தெரிவித்தார்.

கொழும்புவிலுள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய அவர், இலங்கை பொருளாதாரம் நிலைபெற்று வருவதாகவும், கடன் மறுசீரமைப்பு நடைமுறையை விரைவில் தொடங்கலாம் என்றும் கூறினார்.

மேலும், இந்நடைமுறையை முன்னெடுக்க, நாட்டின் அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.