இம்மானுவேல் மக்ரோன் மற்றும் வாங் யீ சந்திப்பு
2023-02-16 10:15:49

பிப்ரவரி 15ஆம் நாள் பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் பாரிஸில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணைய அலுவலகத்தின் தலைவருமான வாங் யீயுடன் சந்திப்பு நடத்தினார்.

அப்போது, சீனா, பிரான்ஸை முன்னுரிமை கூட்டாளியாக எப்போதும் கருதுவதாகக் குறிப்பிட்ட வாங்யீ, பிரான்ஸுடன் இணைந்து உயர்நிலைத் தொடர்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.

பிரான்ஸும் சீனாவும் நெடுநோக்குப் பேச்சுவார்த்தையை வலுபடுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது. காலநிலை மாற்றம், பல்வகை உயிரிங்கள், கடல் பாதுகாப்பு முதலிய துறைகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று பிரான்ஸ் விருப்பம் தெரிவிப்பதாக மக்ரோன் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, உக்ரைன் பிரச்சினை குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.