சீனாவின் இரு கூட்டத்தொடர்களில் செய்தி சேகரிப்புக்கு வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு வரவேற்பு
2023-02-16 16:16:20

சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடரும் முறையே 2023ஆம் ஆண்டு மார்ச் 5 மற்றும் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கவுள்ளன.

இக்கூட்டத்தொடர்களில் செய்தி சேகரிப்புக்கு வெளிநாட்டுச் செய்தியாளர்கள் பிப்ரவரி 22ஆம் நாளுக்குள் செய்தி மையத்திடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

தேசிய மக்கள் பேரவையின் செய்தி மைய இணையத்தளம்: http://www.npc.gov.cn . சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் செய்தி மைய இணையத்தளம்:http://www.cppcc.gov.cn.  கூட்டத்தொடர்களுக்கான நிகழ்ச்சி நிரல் இவ்விணையத் தளங்களில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.