இலங்கையில் மின்சாரக் கட்டணம் 66% விழுக்காடு உயர்வு
2023-02-16 12:12:35

மின்சார கட்டணத்தை 66 விழுக்காடு உயர்த்துவதற்கு இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

 இழப்புகளைத் தவிர்க்கும் விதம், மின்சாரக் கட்டணத்தை 66 விழுக்காடு அதிகரிப்பதற்கான திட்டத்தை அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிறுவனமான சிலோன் மின்சார சபை ஜனவரி தொடக்கத்தில் முன்வைத்தது.

 முன்னதாக கடந்த ஆண்டின் ஆகஸ்ட் திங்களில் தான் அந்நாட்டில் மின்சார கட்டணம் 75 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர்ந்து பண இழப்பு ஏற்படுவதாக சிலோன் மின்சார சபை தெரிவித்திருந்தது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் மட்டும் இலங்கை மின்சார சபை 15 ஆயிரத்து 20 கோடி இலங்கை ருபாய் இழப்பைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.