அமெரிக்க நாடாளுமன்ற தீர்மானங்களுக்குச் சீனா எதிர்ப்பு
2023-02-16 19:37:15

சீன வான்கப்பல் அமெரிக்காவின் வான் எல்லையில் வழிதவறி சென்றதாகக் குற்றஞ்சாட்டுவது தொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் அவையில் பரிசீலனை மூலம் இரண்டு தீர்மானங்கள் 15ஆம் நாள் இரவு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இவ்விரு தீர்மானங்களும், உண்மைக்குப் புறம்பானதாகவும், அரசியல் தந்திரமானதாகவும் உள்ளது. சீனா உறுதியாக இதனை எதிர்க்கிறது என்று தெரிவித்தார்.

அமெரிக்க நாடாளுமன்றம் சீனா மீது அவதூறு பரப்புவதை நிறுத்தி, இந்நிகழ்வை மேலும் தீவிரமாக்காமல் தவிர்க்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்று வாங் வென் பின் தெரிவித்தார்.