சீனா தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்துக்குக் கடும் கண்டனம்:சீனா
2023-02-16 14:08:52

அமெரிக்க உரிமைப் பிரதேசத்தில் சீனப் பலூன் பற்றிய தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது தொடர்பாக, சீனத் தேசிய மக்கள் பேரவையின் வெளிவிவகாரக் கமிட்டி பிப்ரவரி 16ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கடும் கண்டனம் மற்றும் உறுதியான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சிவில் பயன்பாட்டுக்கான ஆளில்லா வான்கப்பல் வழிதவறி அமெரிக்காவின் வான் எல்லைக்குள் நுழைந்தது, தடுக்க முடியாத நிலையில் எதிர்பாராதவாறு ஏற்பட்ட சம்பவமாகும். அமெரிக்கர்களுக்கும் அமெரிக்கப் பாதுகாப்புக்கும் இது எந்த அச்சுறுத்தலாகவும் அமையாது. அமெரிக்க நாடாளுமன்றத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர் இதனைச் சாக்குப்போக்காகக் கொண்டு, வேண்டுமென்றே சிக்கல்களைத் தூண்டும் முறையில் செயல்படுவது, சீனாவை எதிர்த்து கட்டுப்படுத்த விரும்பும் உள்நோக்கத்தை முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.