நம்பகமற்ற நிறுவனப் பட்டியலில் லாக்கீட் மார்டின், ரேதியோன் ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு ஆகிய நிறுவனங்களை இணைக்க சீனா முடிவு
2023-02-16 19:10:42

தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய நலன்களைப் பேணிக்காக்கும் வகையில், தைவான் பிரதேசத்திற்கு ஆயுத விற்பனையில் கலந்து கொள்ளும் லாக்கீட் மார்டின், ரேதியோன் ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு ஆகிய நிறுவனங்களை நம்பகமற்ற நிறுவனப் பட்டியலில் இணைக்க சீன வணிக அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சீன வணிக அமைச்சகம் பிப்ரவரி 16ஆம் நாள் தனது இணையதளத்தில் அது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

மேலும் கீழே உள்ள நடவடிக்கைகள் இவ்விரு நிறுவனங்களுக்கு விதிக்கப்படும்.

ஒன்று, சீனாவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஈடுபட தடை விதிப்பது; இரண்டாவதாக, சீனாவில் புதிதாக முதலீடு செய்ய தடை விதிப்பது; மூன்றாவதாக, உயர்நிலை மேலாளார்கள் சீனாவிற்குள் நுழைய தடை விதிப்பது; நான்காவதாக, சீனாவில் உயர்நிலை மேலாளர்களுக்கு வேலை அனுமதி, தங்கும் மற்றும் வசிக்கும் தகுதி சான்று ஆகியவற்றை அளிக்காது மற்றும் அவற்றை ரத்து செய்வது; ஐந்தாவதாக, சீனாவின் நம்பகமற்ற நிறுவனப் பட்டியல் பற்றிய விதிமுறை அமலுக்கு வந்தது முதல், தைவான் பிரதேசத்துக்கு ஆயுத விற்பனைத் தொகையின் 2 மடங்கு அபராதம் வசூலிக்கப்படும். மேலும், வரும் 15 நாட்களுக்குள் அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்ற 5 அம்ச நடவடிக்கைகள் அடக்கம்.