31 இடங்களில் தொல்லியல் அகழ்வுப் பணிக்கு இந்தியா ஒப்புதல்
2023-02-16 10:19:44

தேசிய அளவில் 31 இடங்களில் தொல்லியல் அகழ்வு பணிகளைத் தொடங்க இந்தியத் தொல்லியல் துறை ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரி ஒருவர் பிப்ரவரி 15ம் நாள் தெரிவித்தார்.

தொல்லியல் ஆய்வு மற்றும் வரலாற்று சின்னங்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்ற இத்துறையானது, பிப்ரவரி 14ஆம் நாள் வெளியிட்ட ஓர் அறிவிப்பில், தில்லியின் புராணா குய்லா, குஜ்ராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா, உத்தரப் பிரதேசத்தின் கோம்தி ஏரி உள்ளிட்ட 31 இடங்கள் அகழாய்வுப் பணிக்கான பட்டியலில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த அகழ்வாய்வானது மாநில அரசு அல்லது பல்கலைக்கழகங்களால் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.