இலங்கையில் மின்கட்டண உயர்வினால் நீக்கப்பட்ட மின்வெட்டு
2023-02-17 10:50:34

இலங்கை மின்வாரியம் அண்மையில் 66% மின் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தியது. இந்த அதிகரிப்பு காரணமாக தினசரி மின்வெட்டு நடவடிக்கையை நிறுத்த இலங்கை வியாழக்கிழமை முடிவு செய்தது.

 விலை உயர்வுத் திட்டம் அரசு வாரியங்களின் அங்கீகாரத்தின் கீழ் நடைமுறைக்கு வந்துள்ளதாக மின்சார மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் கஞ்சானா விஜேசேகெரா தெரிவித்தார்.

 மின்சார வாடிக்கையாளர்களுக்கு நிறுத்தமின்றி மின்சார விநியோகத்துக்கு உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்கே மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சருக்கும் தொடர்புடைய அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவருடைய ஊடகத் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

 இதனிடையில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்குச் சலுகை வழங்கவும், மதத் தளங்கள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் சூரிய ஒளி கூரை அமைக்க வேண்டும் என்றும் விக்ரமசிங்கே அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.