சீன-அமெரிக்க பொருளாதார ஒத்துழைப்பு பரஸ்பர நலன் மற்றும் கூட்டு வெற்றி தன்மையுடையது:சீனா
2023-02-17 18:42:15

2022ஆம் ஆண்டில் சீன-அமெரிக்க வர்த்தக தொகை வரலாற்றில் காணாத புதிய உச்சத்தைப் பதிவாகியுள்ளதாக இரு தரப்புகளும் வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன. சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷூயுடிங் 16ஆம் நாள் கூறுகையில், சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுடன் தொடர்புடையது. உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் அது முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. புதிய உச்சம் பதிவாகிய இரு நாட்டு வர்த்தக தொகை, பொருளாதாரக் கட்டமைப்பில் இரண்டும் ஒன்றை ஒன்று நிறைவு செய்யும் தன்மையையும், இரு நாட்டுப் பொருளாதார ஒத்துழைப்பில் பரஸ்பர நலன் மற்றும் கூட்டு வெற்றி தரும் முக்கியத்துவத்தையும் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

2022ஆம் ஆண்டு சீனாவில் வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் தொகை 123268கோடி யுவானை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் இருந்ததை விட, 6.3விழுக்காடு அதிகமாகும். சீனாவின் கதவு மென்மேலும் திறக்கப்பட்டு வருகிறது. சந்தை மற்றும் சட்டம் ஆகியவற்றை அடிப்படையாகச் சர்வதேச தரமான வணிக சூழலை உருவாக்கச் சீனா தொடர்ந்து பாடுபடும். அமெரிக்க தொழில்நிறுவனங்கள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்து தொழில் புரிந்து, வளர்ச்சியின் நலன்களைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்வதைச் சீனா வரவேற்பதாகவும் ஷூயுடிங் தெரிவித்தார்.