அமெரிக்காவில் இன்னொரு ரயில் தடம் புரண்டது
2023-02-17 18:49:10

உள்ளூர் நேரப்படி 16ஆம் நாள் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் டெட்ராய்ட் மாநகரின் தென்மேற்கு புறநகரப்பகுதியில், சரக்கு தொடர்வண்டி ஒன்று தடம் புரண்டது.

தற்போதுவரை, இச்சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தீங்கு விளைவிக்கக் கூடிய பொருள் வெளியில் கசியும் அறிகுறி இல்லை. இத்தொடர் வண்டியில் ஏற்றிசெல்லபட்ட பொருட்கள் என்ன என்பது பற்றி தற்போது வரை தெரியவில்லை என்று உள்ளூர் காவற்துறை தெரிவித்துள்ளது.