அமெரிக்காவில் தொடர் வண்டிகள் விபத்துக்குள்ளாவதற்குரிய காரணங்கள்
2023-02-17 10:19:51

கடந்த குறுகிய 2 மாதங்களுக்குள் அமெரிக்காவில் பத்துக்கும் மேலான தொடர் வண்டி விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நியூஸ்வீக் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீண்டகாலமாக, ரயில் தொழில் நிறுவனம் மிக அதிகளவில் இலாபம், பாதுகாப்பு அபாயங்களைக் குவித்ததனால் ஏற்பட்ட இன்றியமையாத விளைவு, இந்த விபத்துகள் ஆகும். ஒஹாயோ மாநிலத்தில் தடம் புரண்ட வண்டி, நோர்ஃபோல்க் சட்ஸன் ரயில்வே தொழில் நிறுவனத்துக்குச் சொந்தமானது. உற்பத்தி செலவைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்நிறுவனம், கூடுதல் வேகக் கட்டுப்பாடு மற்றும் ஈசீபி நிறுத்தும் முறை பொருத்தத்தை மறுத்த அதே வேளையில், வண்டி நீள அதிகரிப்பு, சோதனை நேரக் குறைப்பு, ரயில்வே ஆள் குறைப்பு, வண்டியின் பயண எண்ணிக்கை அதிகரிப்பு முதலியவற்றையும் மேற்கொண்டது. 2022ம் ஆண்டில்  இந்நிறுவனம், முன் கண்டிராத அளவு 1270 கோடி டாலர் வருமானம் ஈட்டி, முன்பை விட 14 விழுக்காட்டு வருவாய் அதிகரிப்பைக் கண்டுள்ளது என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.

ஆழமான முறையில் கட்டமைப்புச் சீர்திருத்தத்தை மேற்கொள்ளாவிட்டால், பேராவல் கொண்ட அடிப்படை வசதி திட்ட நிதி மூலதனம், உயர்நிலை அதிகாரிகளின் வருமானமாக மாறும். அமெரிக்க ரயில்வே துறையும் பலனில்லாத விளையாட்டுத்துறையாக மாறும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும்.