பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்
2023-02-18 16:46:07

பாகிஸ்தானின் சிந்து மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் பிப்ரவரி 18ஆம் நாள் கூறுகையில், இம்மாநிலத்தின் கராச்சி நகரில் உள்ள காவல் நிலையம் ஒன்று 17ஆம் நாளிரவு தாக்கப்பட்டது. இதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமுற்றனர். மேலும், 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்குப் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தான் தலைமையமைச்சர் முஹமது ஷாபாஸ் ஷெரீப், இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, நாடு முழுவதும் ஒற்றுமையுடன் பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.