நேட்டோவுக்கு சீனப் பிரிதிநிதியின் வேண்டுகோள்
2023-02-18 16:49:15

உக்ரைன் பிரச்சினை பற்றிய வெளிப்படைக் கூட்டத்தை ஐ.நா பாதுகாப்பவை பிப்ரவரி 17ஆம் நாள் நடத்தியது. ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி ட்சாங்ஜுன் இக்கூட்டத்தில் கூறுகையில், பனிப் போருக்குப் பிறகு நேட்டோவின் கிழக்கு விரிவாக்கத்துடன் உக்ரைன் நெருக்கடி தொடர்புடையது. நேட்டோ அமைப்பு பனிப் போர் சிந்தனையைக் கைவிட்டு விட்டு, உலக அமைதி மற்றும் நிலைப்புத் தன்மைக்குப் பங்காற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.