ஜெர்மனித் தலைமை அமைச்சருடன் வாங் யீ சந்திப்பு
2023-02-18 16:39:04

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத்தின் இயக்குநருமான வாங் யீ, 59ஆவது மியுனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட போது, 17ஆம் நாள் ஜெர்மனியின் தலைமை அமைச்சர் ஸ்கோல்ஸைச் சந்தித்தார்.

வாங் யீ கூறுகையில், தொற்று நோய் பாதிப்பைத் தோற்கடித்த சீனாவின் பொருளாதாரம் வலுவாக மீட்சி அடைந்து வருகிறது. ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவுடன் பல்வேறு துறைகளில் தொடர்புகளை பன்முகங்களிலும் மீண்டும் தொடங்கி, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்தழைப்பை விரிவாக்க சீனா விரும்புகிறது. இருநாட்டு ஒத்துழைப்பை தொடர்ந்து உலகின் முன்னிலையில் இருக்கச் செய்யும் விதம், இருதரப்பும் புதிய சுற்று அரசு நிலை கலந்தாய்வுக்கு ஆயத்தம் செய்து, இருநாட்டுறவின் எதிர்காலத்துக்கு வளர்ச்சித் திட்டத்தை வகுக்க முடியும் என்று தெரிவித்தார்.

ஸ்கோல்ஸ் கூறுகையில், சீனாவுடன் பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்பை உறுதியுடன் வளர்க்கும் ஜெர்மனி, எந்த வடிவிலான இணைப்பு துண்டிப்பையும் எதிர்க்கும் என்று தெரிவித்தார்.

அதேநாள், ஜெர்மன் வெளியுறவு அமைச்சர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஆகியோருடன் வாங் யீ சந்திப்பு நடத்தினார்.