வான்கப்பல் சம்பவம் குறித்து சீனாவின் நிலைப்பாடு:வாங் யீ
2023-02-19 16:46:47

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத்தின் இயக்குநருமான வாங் யீ மியுனிச் பாதுகாப்பு மாநாட்டின் போது, அமெரிக்க தரப்பின் வேண்டுகோளின் பேரில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் முறைசாரா தொடர்பினை மேற்கொண்டார்.

கூறப்படும் வான்கப்பல் சம்பவம் தொடர்பாக சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை வாங் யீ தெளிவுப்படுத்தியதோடு, அமெரிக்கா தனது செயல்முறையை மாற்ற வேண்டும் என்றும், ஆயுத பலத்தைத் தவறாக பயன்படுத்தியதால் சீன-அமெரிக்க உறவுக்கு ஏற்பட்ட இழப்பை ஏற்றுக் கொண்டு ஈடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.