வாங்யீ பொரெலுடன் சந்திப்பு
2023-02-19 16:44:23

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீ, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதாண்மை மற்றும் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர்நிலை பிரதிநிதி பொரெலுடன் பிப்ரவரி 18ஆம் நாள் சந்திப்பு நடத்தினார்.

வாங்யீ கூறுகையில், இவ்வாண்டு, சீன-ஐரோப்பிய ஒன்றிய பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவு உருவாக்கப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவாகும். இரு தரப்பும் கூட்டாளி உறவில் ஊன்றி நின்று, ஒன்று மற்றதன் மைய நலன்களுக்கு மதிப்பு அளித்து, ஒத்துழைப்பு சாதனைகளைப் பேணிமதிக்க வேண்டும். மேலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உறுப்பு நாடுகளும் ஒரே சீனா என்ற கோட்பாட்டைப் பின்பற்றி, இரு தரப்புறவின் அரசியல் அடிப்படையைப் பேணிக்காக்க வேண்டும் என்றார்.

பொரெல் கூறுகையில், சீனாவுடன் உயர்நிலை பரிமாற்றத்தை வலுப்படுத்தி, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது என்றார்.

உக்ரைன் நெருக்கடி பற்றி வாங்யீ கூறுகையில், பேச்சுவார்த்தையை முன்னேற்றுவதில் சீனா ஊன்றி நின்று வருகிறது என்றும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, அரசியல் வழிமுறையைக் காண சீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.