19 நாடுகளின் மக்களுக்கு ஐ.நா உதவி
2023-02-19 17:08:46

19 நாடுகளில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்கள் பட்டினி உள்ளிட்ட நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு உதவியளிக்கும் விதம், ஐ.நாவின் உலக அவசர நிதியிலிருந்து 25 கோடி டாலர் ஒத்துக்கிவைக்கப்படும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் பிப்ரவரி 18ஆம் நாள் அறிவித்தார்.

தற்போது, உலகத்தில் 33.9 கோடி பேருக்கு மனித நேய உதவி தேவைப்படுகிறது. கடந்த ஆண்டில் இருந்ததை விட இது 25 விழுக்காட்டுக்கு மேல் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஐ.நா வெளியிட்ட செய்தியின்படி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இந்த 19 நாடுகளில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.