சீன ஆவணப்பட விழா
2023-02-20 14:36:09

சீன ஊடகக் குழுமம், சீன வெளியுறவு அமைச்சகம்,  பண்பாடு மற்றும் சுற்றுலா துறை அமைச்சகம் ஆகியவை கூட்டாக நடத்திய சீன ஆவணப்பட விழாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைப் பிரிவு பிப்ரவரி 20ஆம் நாள் இணையவழியில் அதிகாரப்பூர்வமாக ஒளிப்பரப்புத் துவங்கியது. 40க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களும் முன்னாள் அரசியல் தலைவர்களும் செய்தி ஊடகங்களின் பொறுப்பாளர்களும் காணொளி மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பி சீன ஆவணப்பட விழா வெற்றிகரமாக நடைபெற வாழ்த்தினர்.

இந்தக் கண்காட்சி ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு, அரபு, ரஷியா ஆகிய மொழிகளின் மூலம், 60க்கும் மேற்பட்ட தரமான ஆவணப்படங்களை உலகப் பார்வையாளர்களுக்கு வழங்கும். உலகத்துடன் இணைந்து கையோடு கை கோர்த்து, அற்புதமான கதைகளைப் பகிர்ந்து கொள்கின்றோம் என்று சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹை சியோங் தெரிவித்தார்.