அணு பாதுகாப்பு:சீனாவின் நிலைப்பாடு
2023-02-20 14:15:49

59ஆவது மியூனிக் பாதுகாப்புக் கூட்டம் 19ஆம் நாள் நிறைவடைந்தது. இக்கூட்டத்தில் 2023ஆம் ஆண்டின் மியூனிக் பாதுகாப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ரஷிய-உக்ரைன் மோதல், உயர் பண வீக்கம், எரிசக்தி நெருக்கடி, அணுசக்தி பாதுகாப்பு ஆகிய பிரச்சினைகள் புதிய உலகளாவிய பாதுகாப்பு கவலைகளாக மாறியுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சீனா, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதையோ அவற்றைக் கொண்டு அச்சுறுத்துவதையோ உறுதியாக எதிர்ப்பதாகத் தெரிவித்தது. இக்கருத்தினைக் கூட்டத்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் ஒருமனதாக வரவேற்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில், சர்வதேச ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பு முறை கடுமையான அறைகூவல்களை எதிர்கொண்டு வருகின்றது. ஐஎன்ஃப் ஒப்பந்தத்திலிருந்து விலகிய பிறகு, உலகெங்கிலும் பல இடங்களில் நடுத்தர தூர ஏவுகணைகளைப் பரவல் செய்ய அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி பல்வேறு நாடுகளின் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.