நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்பு பற்றி ஆய்வு செய்ய கோரும் உரிமை சர்வதேச சமூகத்துக்கு உண்டு
2023-02-20 19:48:13

நார்ட் ஸ்ட்ரீம் குழாய்களை வெடித்து தகர்த்தும் நோக்கத்தையும் அதற்கான தொழில் நுட்பத்தையும் கொண்டுள்ள ஒரேயொரு நாடு அமெரிக்கா என்று கொலம்பிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெஃப்ரி சாக்ஸ் தெரிவித்தார். இது குறித்த கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் பிப்ரவரி 20ஆம் நாள் பதிலளிக்கையில், நார்ட் ஸ்ட்ரீம் குழாய், ஐரோப்பிய எரியாற்றலின் உயிர் நாடி என அழைக்கப்பட்டது. அதனை வெடித்து தகர்த்த சம்பவம், உலகளாவிய எரியாற்றல் சந்தைக்கும் இயற்கைச் சூழலுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார்.

இச்சம்பவம் பற்றி நியாயமான மற்றும் தொழில்முறை சார் கள ஆய்வு மேற்கொள்வது அவசியமானது. முக்கிய பன்னாட்டு உள்கட்டமைப்பை சீர்குலைக்கும் குற்றச் செயலின் கடுமை மற்றும் அதனால் ஏற்பட்ட மோசமான விளைவைக் கருத்தில் கொண்டு, முழுமையான ஆய்வை கோரும் உரிமை சர்வதேச சமூகத்துக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.