பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழப்பு
2023-02-20 16:18:50

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் 19ஆம் நாளிரவு பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று எதிரில் வந்து கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 12பேர் உயிரிழந்தனர். 54பேர் காயமடைந்தனர்.

பேருந்தின் பிரேக் செயலிழப்பு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் மீட்புத் துறை அதிகாரி ஒருவர் 20ஆம் நாள் தெரிவித்தார்.

மோசமான சாலைகள், பாதுகாப்பு விழிப்புணர்வுக் குறைவு உள்ளிட்ட காரணிகளால், பாகிஸ்தானில் போக்குவரத்து விபத்துகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.