அமெரிக்காவின் மேலாதிக்கம் மற்றும் அதன் பாதிப்பு பற்றிய அறிக்கை
2023-02-20 16:32:10

அமெரிக்காவின் மேலாதிக்கம் மற்றும் அதன் பாதிப்பு பற்றிய அறிக்கை பிப்ரவரி 20ஆம் நாள் வெளியிடப்பட்டது. அரசியல் மற்றும் இராணுவம், பொருளாதாரம் மற்றும் நிதி, அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் பண்பாடு ஆகிய துறைகளில் அமெரிக்கா மேலாதிக்கத்தைத் தாறுமாறாகப் பயன்படுத்திய வெறுப்பூடும் செயல்கள் இவ்வறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. உலக அமைதி மற்றும் நிலைத் தன்மைக்கும், பல்வேறு நாட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்கும் அமெரிக்காவின் இச்செயல்கள் விளைவித்த கடும் பாதிப்புகளை, சர்வதேசச் சமூகம் இவ்வறிக்கையின் மூலம் மேலும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

இவ்வறிக்கையில், 2 உலகப்போர்கள் மற்றும் பனிப் போருக்குப் பிறகு முதலாவது வல்லரசாக மாறிய அமெரிக்கா, பிற நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிடுவது, மேலாதிக்கத்தைத் தாறுமாறாகப் பயன்படுத்தி, போர் தொடுப்பது ஆகியவை மூலம் சர்வதேசச் சமூகத்துக்குத் தீங்கு விளைவித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்கா நீண்டகாலமாக ஜனநாயகம் மற்றும் மனித உரிமை என்ற பெயரில், தனது விழுமியங்கள் மற்றும் அரசியல் அமைப்புமுறைக்கிணங்க வேறு நாடுகள் மற்றும் உலக ஒழுங்கை உருவாக்க முயன்று வருகிறது என்றும் இதில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

அனைத்து வடிவிலான மேலாதிக்கவாதம் மற்றும் வல்லரசு அரசியலையும், வேறு நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிடுவதையும் சீனா எப்போதுமே எதிர்த்து வருகிறது. அமெரிக்கா தனது செயல்களைத் தற்சோதனை செய்து, மேலாதிக்கத்தைக் கைவிட வேண்டும் என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.