பல்வேறு நாடுகளுடன் இணைந்து தூய்மையான உலகத்தை உருவாக்க சீனா முயற்சி
2023-02-21 19:39:37

2022ஆம் ஆண்டு சீனாவின் சுற்றுச்சூழல் மேம்பாட்டு இலக்கு தடையின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சீனச் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் பிப்ரவரி 21ஆம் நாள் கூறுகையில், சீனா தொடர்ந்து பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைத்து, பசுமையான வளர்ச்சிக்கான ஒத்த கருத்துக்களை உருவாக்கி, மேலும் தூய்மையான மற்றும் அழகான உலகத்தை கட்டமைப்பதற்குப் பாடுபடும் என்று தெரிவித்தார்.

தற்போது பசுமையான வளர்ச்சி உலகின் கால ஓட்டத்துக்கு ஏற்றது. 2000ஆம் ஆண்டிலிருந்து, உலகளவில் புதிதாக அதிகரித்துக் காணப்படும் காடு வளர்ப்பு பரப்பளவில் சுமார் 25 விழுக்காடு சீனாவில் உள்ளது. பசுமையான வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு தொடர்ந்து சாதனைகளைப் பெற்று வரும் சீனா, உலகளாவிய சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் காலநிலை மாற்றச் சமாளிப்புக்கு முக்கியப் பங்காற்றி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.