ஆளில்லா வான்கப்பல் பற்றிய அமெரிக்காவின் தீர்மானத்துக்கு சீனா கண்டனம்
2023-02-21 17:02:03

ஆளில்லா வான்கப்பல் சம்பவம் பற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனெட் அவை தீர்மானம் ஒன்றை ஏற்றுக் கொண்டதற்கு எதிராக, சீனத் தேசிய மக்கள் பேரவையின் வெளிவிவகார ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனெட் அவை ஏற்றுக் கொண்ட இத்தீர்மானத்தில், சீனா அச்சுறுத்தல் என்ற கருத்தை வேண்டுமென்றே பரப்பியதுடன், சீனா மீது தீயநோக்கத்துடன் அவதூறு தெரிவித்துள்ளது. அந்நாட்டின் பிரதிநிதிகள் அவை, இது போன்ற தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அமெரிக்கா உண்மைகளை திரித்துபுரட்டி, சீனா மீது நிர்ப்பந்தம் திணிக்க முயன்ற மற்றொரு தவறான செயலாக இது மாறியுள்ளது. எதிர்பாராத நிலையில் எதேச்சையாக நிகழ்ந்த சம்பவத்தை அரசியலுடன் இணைத்து அதனைச் சிக்கலாக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இச்செயல், தெளிவான மேலாதிக்கச் செயலாகும். அமெரிக்க நாடாளுமன்றம் உண்மைக்கும், சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவுகளின் அடிப்படை கொள்கைக்கும் மதிப்பளித்து, சீனா மீது பழி தூற்றுவதை உடனே நிறுத்தி, சீன-அமெரிக்க உறவுக்கும் மேலும் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.